இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் சொதப்பல் – இங்கிலாந்துக்கு 277 ரன்கள் வெற்றி இலக்கு!

சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:59 IST)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 277 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த ஐந்தாம் தேதி முதல் கிரிக்கெட் போட்டியில் மான்செஸ்டர் நகரில் தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. ஷான் மசூத் 156 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் ஷதாப் கான் 45 ரன்களும் எடுத்ததை அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் சிறப்பான இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதன் பின்னர் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் பாகிஸ்தான் அணி மொத்தமாக 276 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு இலக்காக 277 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்