ஆசியா கோப்பை கிரிக்கெட்: 162 ரன்களில் சுருண்டது பாகி'ஸ்தான்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (20:15 IST)
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அந்த போட்டியை இருநாட்டு ரசிகர்களும் போட்டி போல் பார்க்காமல் போர் போல் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. முதல் இரண்டு விக்கெட்டுக்கள் சீக்கிரம் விழுந்துவிட்டாலும் பாபர் அசாம் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் நிதானமாக விளையாடி 47 மற்றும் 43 ரன்கள் எடுத்தனர். ஆனால் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் மளமளவென விக்கெட்டுக்கள் விழுந்ததால் பாகி\ஸ்தான் அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்திய பந்துவீச்சாளர்கள் மிக அபாரமாக பந்து வீசினர். குறிப்பாக புவனேஷ்குமார் 7 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதேபோல் கேதார் ஜாதவ் 3 விக்கெட்டுக்களையும், பும்ரா 2 விக்கெட்டுக்களையும் குல்திப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்ந்தது

இன்னும் சில நிமிடங்களில் 163 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்