ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி

Webdunia
சனி, 25 நவம்பர் 2017 (07:23 IST)
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 2 இடத்தில் உள்ள ஜப்பானை சேர்ந்த அகானே யமாகுச்சி என்ற வீராங்கனையுடன் மோதினார்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பி.வி.சிந்து இறுதியில் 21-12, 21-19 என்ற நேர் செட்களில் அகானே யமாகுச்சியை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் அரையிறுதியில் பி.வி.சிந்து, 6ஆம் நிலையில் உள்ள தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டனோனை எதிர்கொள்ளவுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்