பழிக்கு பழிவாங்கிய பி.வி.சிந்துவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (22:33 IST)
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்று பாரத நாட்டிற்க்கே பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தற்போது இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை செய்துள்ளார்.



இன்று டெல்லியில் போட்டி நடைபெற்ற இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரோலினா மரினை  21- 16, 21 – 19 என்ற நேர் செட்களில் சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் இதே வீராங்கனை கரோலினாவிடம்தான் சிந்து தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தோல்விக்கு தற்போது பழிக்கு பழி வாங்கினார்.

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்