ஒரு தங்க பதக்கம் கூட வெல்லவில்லை! – ஒலிம்பிக் தரவரிசையில் கீழிறங்கும் இந்தியா!

செவ்வாய், 27 ஜூலை 2021 (12:58 IST)
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வரும் நிலையில் இந்தியா ஒரு தங்க பதக்கம் கூட வெல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

கடந்த 5 நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் விமரிசையாக நடந்து வரும் நிலையில் பல்வேறு போட்டிகளில் இந்தியா ஒரேயொரு வெள்ளி பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளது. 8 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 20 பதக்கங்களை பெற்று அமெரிக்கா முதலிடத்திலும், தொடர்ந்து 14 பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன, இந்நிலையில் ஒலிம்பிக் தரவரிசையில் இந்தியா ஒரே ஒரு வெள்ளியுடன் 34வது இடத்தில் பின் தங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்