வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

செவ்வாய், 27 ஜூலை 2021 (09:41 IST)
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் தென் மேற்கு பருவக்காற்றால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு மாநிலங்களான உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்