இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பு மைதானத்தில் நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 244 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் அசலங்கா சதமடித்து அசத்தினார். அதையடுத்து ஆடிய வங்கதேச அணி 167 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது.
இந்த போட்டியின் இடையே மைதானத்துக்குள் பாம்பு ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் பாம்பு அகற்றப்பட்டு போட்டித் தொடங்கியது.