உலகக் கோப்பை ஹாக்கி தொடர்: தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (07:36 IST)
உலக கோப்பை ஹாக்கி தொடரிலிருந்து இந்தியா வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக ஒடிசாவில் உலக கோப்பை ஆக்கிப்போட்டியில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று நடந்த முக்கிய போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவின்போது இரு அணிகளும் மூன்று கோல்கள் போட்டிருந்த நிலையில் ஷூட் அவுட் முறைக்கு போட்டி சென்றது. 
 
அதில் இந்தியா நான்கு கோல்களும் நியூசிலாந்து ஐந்து கோல்களும் போட்டதை அடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தோல்வி அடைந்ததால் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்