இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தற்போது கான்பூரில் நடைபெற்று வருகிறது
ரோஹித் சர்மா மற்றும் விராத் கோஹ்லியின் அபாரமான சதங்கள் காரணமாக இந்தியா 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் முன்ரோ 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி வருகிறார். சற்றுமுன் வரை நியூசிலாந்து 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 115 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 32 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற 222 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தவில்லையெனில் வெற்றி கைநழுவி போக வாய்ப்புள்ளது.