இந்த நிலையில் கான்பூரில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. சற்றுமுன் வரை இந்திய அணி 34 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா மிக அபாரமாக சதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். கேப்டன் விராத்கோஹ்லி 67 ரன்கள் அடித்துள்ளார்.
இன்னும் 16 ஓவர்கள் மீதமிருக்கையில் இந்தியா 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறவும், தொடரை வெல்லவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.