வலுவான நிலையை நோக்கி நியுசிலாந்து… விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (15:53 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியுசிலாந்தின் கை ஓங்கி இருக்கிறது.

கான்பூர் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்ரேயாஸின் சதம் மற்றும் ஜடேஜாவின் அரைசதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் சேர்த்தது. நியுசிலாந்து அணியின் சவுத்தீ அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி விக்கெட் இழப்பில்லாமல் இதுவரை 116 ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர். வில் யங் 70 ரன்களோடும், டாம் லாதம் 42 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்