இந்திய அணியின் புதிய ஜெர்சியில் நடராஜன்: என்ன ஒரு அழகு!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (19:43 IST)
natarajan
இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த பல வருடங்களாக நீலநிற ஜெர்சி இருந்தது என்பதும் இந்த ஜெர்சி கிரிக்கெட் இந்திய வீரர்களுக்கு அட்டகாசமான பொருத்தமாக இருந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் இருந்து இந்திய அணிக்கு இந்த ஜெர்சி கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே இந்த புதிய ஜெர்சி அணிந்து தவான் உள்பட ஒரு சில வீரர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் புகழ் நடராஜன் இந்திய அணியில் விளையாட இருக்கும் நிலையில் அவரும் புதிய ஜெர்சியை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அட்டகாசமாக இருக்கும் இந்த போஸ் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
தமிழகத்தைச் சேர்ந்த அதிலும் சேலத்தை சேர்ந்த நடராஜன் மென்மேலும் புகழ்பெற ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்