இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய ஜெர்சி அறிமுகம்…
செவ்வாய், 24 நவம்பர் 2020 (23:07 IST)
சமீபத்தில் ஐபிஎல் தொடர் முடிவடைந்தது. இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கெடுப்பதற்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணிக்கு புது ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஜெர்ஸியை அணிந்துகொண்டுதான் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது.
மேலும், இந்தப் புதிய ஜெர்ஸியை அணிந்தபடி இந்திய அணி வீரர் தவான் , ஒரு புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
மேலும் இப்புதிய ஜெர்சியில் பைஜூஸ் என்ற நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.