டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன்! – இந்தியாவுக்கு கிடைத்த புதிய சாதனை!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (08:19 IST)
சுவிட்சர்லாந்தில் நடந்த டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா முதன்முறையாக சாம்பியன்ஷிப் வென்றுள்ளார்.

இந்திய ஈட்டி எறிதல் தடகள வீரரான நீரஜ் சோப்ரா உலகம் முழுவதிலும் நடைபெறும் பல போட்டிகளிலும் கலந்து கொண்டு ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்து வருகிறார்

சமீபத்தில் இவருக்கு காயங்கள் ஏற்பட்டதால் லண்டனில் நடந்த காமன்வெல்த் தொடரில் பங்கேற்கவில்லை. அதை தொடர்ந்து தற்போது ஸ்விட்சர்லாந்தில் லாசென் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்றார் நீரஜ் சோப்ரா.

அதில் அரையிறுதி போட்டியில் ஈட்டி எறிதலில் 89.08 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கினார் நீரஜ் சோப்ரா. இதன் மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா இறுதி போட்டியில் 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டு எறிந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்த போட்டிகளில் இதுவரை ஒரு இந்தியர் கூட வெற்றி பெற்றிராத நிலையில் அந்த தடையை நீரஜ் சோப்ரா உடைத்துள்ளதுடன், சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்கு புதிய சாதனையை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்