தீவிர யார்க்கர் பயிற்சியில் நடராஜன்: முதல் ஒருநாள் போட்டியில் இடம்பெறுவாரா?

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (22:25 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது என்பதும், இரண்டு தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து நாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளது. நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் நடராஜன் அணியில் இணைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது அவர் இன்று புனே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அவருடைய யார்க்கர் ரசிக்க வைக்கும்படி இருப்பதாகவும் நாளைய போட்டியில் அவர் இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய அணியின் வட்டாரங்கள் கூறுகின்றன 
 
டெஸ்ட் போட்டியில் நடராஜன் விளையாடா விட்டாலும் கடைசி டி20 போட்டியில் விளையாடி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பெற்று விக்கெட்டுகளை வீழ்த்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்