ஐசிசி-ன் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது பெற்ற பாகிஸ்தான் வீரர்

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (18:26 IST)
ஐசிசி கவுன்சில்  ஏப்ரல் மாதத்திற்கான  சிறந்த வீரர் விருது பாகிஸ்தான் வீரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரரை ஐசிசி கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.

அதில், பாகிஸ்தான் வீரர் பக்கார் ஜமானுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

 ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனை ஐசிசி அமைப்பு அறிவித்தது.

இதில், நியூசிலாந்து வீரர் மார்க் சாம்ப்மென், இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்யா, மற்றும் பாகிஸ்தான் பாக்கார் ஜமான் ஆகியோர் பெயர்கள் சிறந்த வீரருக்கான விருதில் பரிந்துரை செய்யப்பட்டன.

இவர்கள் மூவரில் பாகிஸ்தான் வீரர் பக்கார் ஜமானுக்கு ஏப்ரல்  மாதத்திற்கான சிறந்த வீரருக்கான  விருது வழங்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்