மீண்டும் ஒரு சாதனையை முறியடித்த மிதாலி ராஜ்!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (09:04 IST)
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உலகக்கோப்பையில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக தலைமை தாங்கியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மிதாலி ராஜ் தலைமையில் இந்த ஆண்டு உலகக்கோப்பையில் களமிறங்குகிறது. இது அவர் தலைமையில் இந்திய அணி விளையாடும் நான்காவது உலகக்கோப்பை தொடராகும். 1999 ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வரும் மிதாலி ராஜுக்கு இந்த உலகக்கோப்பை தொடர் ஆறாவது தொடராகும். பெண்கள் கிரிக்கெட்டில் எந்த ஒரு வீராங்கனையும் 6 உலகக்கோப்பைகள் விளையாடியதில்லை.

ஆண்கள் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (1992-2011) ஆறு உலகக்கோப்பைகளிலும், பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட் (1975-1996) 6 உலலக்கோப்பைகளிலும் அதிகபட்சமாக விளையாடியுள்ளனர். இப்போது இவர்கள் இருவரின் சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்துள்ளார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டிக்கு தலைமையேற்ற நிலையில் அவர் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை 24 உலகக்கோப்பை போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு, இதற்கு முன்னர் இந்த சாதனையை படைத்திருந்த பெலிண்டா கிளார்க்கை முந்தியுள்ளார் மிதாலி ராஜ்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்