இந்தியா-தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி ரத்து!

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (17:52 IST)
இந்தியா-தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி ரத்து!
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் ஒருநாள் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செய்திருக்கும் நிலையில் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற இருந்தது.
 
இன்று மதியம் 1.30மணிக்கு தொடங்க இருந்த இந்த போட்டி மழை காரணமாக தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில் இடையில் மழை சிறிது நின்றதால் ஓவர்கள் குறைக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு தொடங்கலாம் என்றும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் சற்றுமுன்னர் போட்டி நடத்த ஏதுவாக மைதானம் இல்லை என்பதை நடுவர்கள் உறுதி செய்து முதல் ஒருநாள் போட்டி போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
 
இதனை அடுத்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டியில் மார்ச் 15ஆம் தேதி லக்னோவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியாவது மழை இடையூறு இல்லாமல் நடக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மார்ச் 18ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்