லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா செய்த சாதனைகள்!

செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (07:36 IST)
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு சில சாதனைகள் செய்து உள்ளது. ஏற்கனவே இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு முறை மட்டுமே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அதிலும் மிக அதிக ரன்கள் வித்தியாசமான 151 என்ற ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வெற்றியை அடுத்து அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஸ்மித் மற்றும் பாண்டிங் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்
 
நேற்றைய போட்டியில் 9வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் புதிய சாதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 9வது விக்கெட்டுக்கு கபில்தேவ் மற்றும் மதன்லால் எடுத்த 66 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்