ஒய்வு பெரும் கோலி: களத்தில் ரெய்னா? பிசிசிஐ நாளை முடிவு!!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (19:34 IST)
இந்திய அணி தற்போது இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


 
 
இந்நிலையில் அடுத்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி- 20 போட்டியில் விளையாட உள்ளது. இதனால், இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
 
மேலும், அடுத்து வரும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க தொடர்களை கருத்தில் கொண்டு, இந்திய கேப்டன் கோலிக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள், டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது.
 
மேலும், ஜடேஜா, அஷ்வின் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என  தெரிகிறது. இதனால் இந்திய அணியில் ரோகித் சர்மா, ரெய்னா, மிஸ்ரா, அக்‌ஷர் படேல், ஜெயந்த் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்