கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து: அடுத்த கேப்டன் யார்??

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (12:22 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் கோலியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. பிசிசிஐ புதிய கேப்டனை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.


 
 
தோனி தனது கேப்டன் பதவியை துறந்ததன் மூலம் கேப்டனானவர் கோலி. ஆனால் சமீப காலமாக அவரது நடவடிக்கைகள் பிசிசிஐ-க்கு அதிருப்தியை அளித்துள்ளதாம்.
 
அனில் கும்ளே விவகாரத்தால் கோலியின் மீது இருந்த நல்ல மதிப்பெல்லாம் சற்று குறைந்துவிட்டதாம். அதுவும் இவர்களது சணடை சாம்பியன்ஸ் டிராபியின் போது அதிகமானது. சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெறாததற்கு இவர்களது மனகசப்பை ஒரு காரணமாக பிசிசிஐ பார்க்கிறதாம்.
 
எனவே, கோலியை கேப்டன் பதவில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கோலி பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அடுத்த கேப்டனாக ரோகித் ஷர்மா அல்லது ரஹானே நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
 
அடுத்த கட்டுரையில்