ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது புனே நகரில் 17வது போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால், சென்னை அணி களமிறங்கியது.
ராஜஸ்தான் தரப்பில் கோபால் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுக்களையும், லாஹின் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். வெற்றி பெற 205 ரன்கள் இலக்கு என்ற நிலையில் இன்னும் சற்று நேரத்தில் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.