ராஜ்ஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (21:25 IST)
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதின.

இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அதன் பின்னர் வந்த வீரர்கள் அந்த தொடக்கத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததால் பெரிய ஸ்கோர் செல்ல முடியவில்லை.

கடைசி கட்டத்தில் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் எக்ஸ்ட்ரா மற்றும் மோசமான பீல்டிங் காரணமாக தட்டு தடுமாறி 171 ரன்கள் சேர்க்க முடிந்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 56 ரன்கள் சேர்த்தார். 172 ரன்கள் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் கொல்கத்தா அணி ப்ளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு மங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்