போட்டிதான் நடக்கலையே! சம்பளத்தை குறைச்சிடலாம்! – வாய்விட்ட மல்ஹோத்ராவை வெளுத்த கவாஸ்கர்

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (08:25 IST)
கொரோனா பாதிப்புகள் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் சம்பளத்தை குறைப்பது குறித்து அதிகாரி ஒருவர் பேசியுள்ளதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் நடைபெற இருந்த பிரபல ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடரும் பட்சத்தில் சில போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் அசோக் மல்கோத்ரா ”கொரோனா பாதிப்பால் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் ரத்தாகி இருப்பதால் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் ”இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் பேசியதை கேட்க வேடிக்கையாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவாக செயல்பட அவர் முயற்சிக்கிறார். ஆனால் அவருக்கு சம்பள குறைப்பு குறித்து பேச அதிகாரமில்லை. நடப்பு சர்வதேச இந்திய வீரர்கள் யாரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லை” என கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் குறைக்க பிசிசிஐ திட்டமிடவில்லை என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்