வீட்டுல இப்படிதான் பொழுது போகுது – பதில் சொன்ன பும்ரா!

வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (09:59 IST)
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் கிரிக்கெட் வீரர் பும்ரா.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த நேரத்தை பயனுள்ள வகையில் செய்வதற்காக பிரபலங்கள் பலர் பல்வேறு விஷயங்களை மக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

ஊரடங்கு காலங்களில் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் பும்ரா லைவ் சாட் மூலமாக தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் எப்படி பொழுதை கழிக்கிறீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பும்ரா ”அம்மாவிற்கு வீட்டு வேலைகள் செய்ய உதவுகிறேன். தோட்டத்தில் செடிகள் வளர்க்கிறேன். மற்ற நேரங்கள் முழுவதும் வெப்சீரிஸ்கள் தான் பார்க்கிறேன். அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் போன்றவற்றை சப்ஸ்க்ரைப் செய்துள்ளேன். முடிந்தளவு பார்த்து முடித்து விட வேண்டும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்