டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியல்; முன்னேற்றம் காணும் இந்தியா!

ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (10:57 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற நிலையில் தரவரிசையில் இந்தியா முன்னேறியுள்ளது.

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பல நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்தும் பல வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் சுபேதார் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளார்.

இந்நிலையில் முன்னதாக 4 வெண்கலம், 2 வெள்ளி பதக்கங்களுடன் 63வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது தங்க பதக்கம் ஒன்றை வென்றதால் 47வது இடத்திற்கு வேகமாக முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் சீனாவும் கடும் மோதலில் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்