டோக்கியோவில் ராட்சத ஒலிம்பிக் வளையங்கள் அகற்றம்

புதன், 11 ஆகஸ்ட் 2021 (13:30 IST)
32வது ஒலிம்பிக்ஸை ஒட்டி டோக்கியோவில் நிறுவப்பட்டிருந்த ராட்சத ஒலிம்பிக் வளையங்கள் பத்திரமாக அகற்றம். 

 
டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 கோலகலமாக துவங்கியது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்குமு் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி டோக்கியோவில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் முடிவடைந்த நிலையில் ஒலிம்பிக் கொடி பிரான்ஸ் பிரநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் 32வது ஒலிம்பிக்ஸை ஒட்டி டோக்கியோவில் உள்ள ஓடேப்பா மெரன் பார்க்கில் கடந்த ஆண்டு நிறுவப்பட்டிருந்த ராட்சத ஒலிம்பிக் வளையங்களை அதிகாரிகள் பாதுகாப்புடன் அகற்றினர். 15 மீட்டர் நீளம், 32 மீட்டர் அகலம், 1.7 மீட்டர் தடிமனுடன் அமைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் வளையங்கள் பத்திரமாக அகற்றப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்