சரவெடியாய் வெடித்த பட்லர்; 161 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து

Webdunia
ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (20:59 IST)
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து இந்திய அணி 168 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
இந்திய தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 
 
தொடக்க வீரராக களமிறங்கிய குக் 29 ரன்கள் குவித்து வெளியேறினார். அதன்பின் வரிசையாக எல்ல பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 9 விக்கெட்டுகள் விழுந்த பின் பட்லர் சரவெடியாய் வெடித்தார்.
 
சிக்ஸர், பவுண்டரி என அடித்து விளாசினார். இறுதியில் பூம்ரா பாந்துவீச்சில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 168 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்