ஜான் ரைட் பயிற்சியாளராக இருந்த காலத்தில் பவுலர்களுக்கு பேட்ஸ்மேனையே கோட்ச்சாக நியமித்தார் என வி வி எஸ் லட்சுமனன் தெரிவித்துள்ளார்.
இந்திய பவுலர்களின் பேட்டிங் திறமையை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பயிற்சியாளர் ஜான் ரைட் ஒரு சிறப்பான முடிவை எடுத்ததாகவும் அதனால் மிகப்பெரிய பலன் கிடைத்ததாகவும் முன்னாள் வீரர் ஜான் ரைட் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘பவுலர்களின் பேட்டிங் திறமையை வெளிக்கொண்டதில் ஜான் ரைட்டுக்குதான் அதிக பங்கு உள்ளது. ஒவ்வொரு பவுலருக்கும் ஒரு பேட்ஸ்மேனைக் கோட்சாக நியமித்தார். நான் ஜாகீர் கானுக்கு பயிற்சியாளர் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
நாங்கள் ஒவ்வொரு வலைப்பயிற்சியின் போதும் பேட்டிங் பற்றி அவர்களுக்கு யோசனை வழங்கினோம். அதனால் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து அசத்தினர். ஜாகிர் கானின் ஒரு இன்னிங்ஸால் சச்சின் இரட்டை சதம் அடிக்க முடிந்தது.’ எனத் தெரிவித்தார்.