31 வயதில் ஓய்வை அறிவித்த இளம் ஆஸ்திரேலிய வீரர்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (11:59 IST)
ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் பேட்டின்சன் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

ஆஸி அணிக்காக 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் ஜேம்ஸ் பேட்டின்ஸன். இதுவரை 21 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். காயம் காரணமாக தொடர்ந்து அணியில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த இவர் இப்போது தனது 31 ஆவது வயதிலேயே ஓய்வை அறிவித்துள்ளார்.
ஆனால் உள்ளூர் அணியான விக்டோரியா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்