முதல் பந்தில் 13 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால்.. கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. ஜிம்பாப்வே தோல்வி..!

Siva

திங்கள், 15 ஜூலை 2024 (07:18 IST)
இந்தியா மற்றும் ஜிம்பாவை அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஐந்தாவது மற்றும் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.  இந்த போட்டியின் முதல் பந்தில் ஜெய்ஸ்வால் சிக்சர் அடிக்க, அது நோபால் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பிரீ ஹிட் பந்திலும் சிக்ஸர் அடிக்க முதல் பந்தில் ஜெய்ஸ்வால் 13 ரன்கள் அடித்தார். ஆனால் அதே நேரத்தில் அந்த ஓவரின் நான்காவது பந்தில் அவர் அவுட் ஆனார். இருப்பினும் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக முதல் பந்தில் 13 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சஞ்சு ஜான்சன் பொறுப்பாக விளையாடி 58 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 168 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 4 - 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்