டெல்லி அணியின் மற்றொரு வீரர் விலகல்: அணிக்கு பின்னடைவா?

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (07:23 IST)
டெல்லி அணியின் மற்றொரு வீரர் விலகல்: அணிக்கு பின்னடைவா?
இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போட்டிகளில் டெல்லி அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது, அந்த அணி தற்போது வரை 7 போட்டிகளில் விளையாடிய 5 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டில் மட்டும் தோல்வியடைந்து 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லி அணியின் முக்கிய வீரரான அமித் மிஸ்ரா சமீபத்தில் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனை அடுத்து தற்போது மேலும் ஒரு வீரரும் காயம் காரணமாக விலகியுள்ளார் என்ற தகவல் அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது
 
டெல்லி அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து டாக்டரின் அறிவுறுத்தலின்படி அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக தெரிகிறது
 
அமித் மிஸ்ரா மற்றும் இசாந்த் சர்மா ஆகிய இரண்டு வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து டெல்லி அணியில் இருந்து விலகி உள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது இருப்பினும் அந்த அணி இன்னும் வலுவாக இருப்பதால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்