ரோகித் சர்மாவுக்கு ஓய்வு? மயங்க அகர்வாலுக்கு வாய்ப்பு! – வெஸ்ட் இண்டீஸ் தொடர் அப்டேட்!

வியாழன், 21 நவம்பர் 2019 (13:14 IST)
வங்கதேசத்துடன் இந்தியா விளையாடி வரும் தொடர் முடிந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய சுற்றுப் பயண ஆட்டம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இதற்கு முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி அங்கு சுற்று பயண ஆட்டத்தை முடித்து வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இந்திய மண்ணில் இந்திய அணியோடு போட்டியிட வெஸ்ட் இண்டீஸ் அணி டிசம்பர் மாதத்தில் வருகை தர உள்ளனர்.

வெஸ்ட் இண்ட்டீஸுடன் விளையாட போகும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. வங்கதேசத்துடனான டி20 ஆட்டத்தில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை போல, தொடர்ந்து விளையாடி வரும் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மாவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச தொடரில் அபாரமாக ஆடி ரசிகர்களை கவர்ந்த மயங்க அகர்வாலுக்கு அடுத்த தொடரிலும் வாய்ப்புகள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸுடனான தொடரில் டி20, டெஸ்ட் இரண்டிலுமே கோலியே கேப்டனாக பதவி வகிப்பாரா என்பது குறித்து தேர்வுக்குழு முடிவு செய்யும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்