கோப்பையை வென்றது இந்தியா! சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் பரிதாபம்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (04:10 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று 5வது மற்றும் இறுதி போட்டி நடந்தது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. ஒரு போட்டி மழையால் ரத்து ஆனது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா தொடரை வெல்லும் நிலை இருந்தது.



 
 
இந்த நிலையில் நேற்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 205 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி மற்றும் தொடரை வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 206 ரன்கள் எடுத்தது
 
கேப்டன் விராத் கோஹ்லி மிக அபாரமாக விளையாடி 111 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திக் 50 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி ஆட்டநாயகனாகவும், ரஹானே தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 
 
இரு அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டி வரும் ஜூலை 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்