மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன்..!

Siva
திங்கள், 16 டிசம்பர் 2024 (08:25 IST)
21 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றதை அடுத்து, இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நேற்று முன்தினம் முதலாவது அரையிறுதி போட்டியில், இந்திய அணி ஜப்பான் அணியை எதிர்கொண்டு 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதிப் போட்டியில் சீனா மற்றும் தென் கொரியா அணிகள் மோதிய நிலையில், அதில் சீன அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டியில் நுழைந்தது.

இதனை அடுத்து, இந்தியா-சீனா அணிகள் இறுதிப்போட்டியில் நேற்று இரவு மோதிய நிலையில், இதில் இந்தியா அணி வீராங்கனைகள் மிக அபாரமாக விளையாடினர்.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்டநேர முடிவில் தலா ஒரு கோல் அடித்ததால், ஆட்டம் சமநிலையில் இருந்தது. இதனை அடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்ட நிலையில், அதில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

ஒன்பதாவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்