இன்று 3வது ஒருநாள் போட்டி: முழு வெற்றியை பெறுமா இந்தியா?

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (08:10 IST)
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது 
 
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியிலும் வென்று இந்தியா முழுமையான வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்திலும் 24ஆம் தேதி நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று முழுமையாக தொடரை வென்ற இந்திய அணி தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இதனை அடுத்து இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜூலை 29ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது என்பதும் இரு அணிகளுக்கிடையே 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்