இந்தியாவில் அதிவேகமாக பரவும் குரங்கு அம்மை: உலக சுகாதார மையம் எச்சரிக்கை!
செவ்வாய், 26 ஜூலை 2022 (07:40 IST)
இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவில் அதிவேகமாக பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் குரங்கு அம்மைத் தொற்று பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் எனவே இந்தியா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் வலியுறுத்தியுள்ளார்
குறிப்பாக இந்தியாவில் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு குரங்கு அம்மை நோய் தொற்று அதிவேகமாகப் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து குரங்கு அம்மை நோய்த் தடுப்பை தீவிரப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.