3வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (07:41 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டி தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி சற்றுமுன் தொடங்கியுள்ளது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை நியூசிலாந்து அணி இரண்டு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்துள்ளது. 2வது ஓவரில் புவனேஷ்குமார் பந்தில் குப்தில் அவுட் ஆனார்.
 
நியூசிலாந்து அணி இன்று இரண்டு ஸ்பின் பந்துவீச்சாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. காலின் டி கிராந்தோமுக்கு பதிலாக இன்று மிட்செல் சாண்ட்னெர் களமிறங்கியுள்ளார். அதேபோல் இந்திய அணியில் இன்று தல தோனி விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் களமிறங்கியுள்ளார். மேலும் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்ட்யா இன்று களம் இறங்கியுள்ளார்.
 
இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வென்றுவிடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்