முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 134 ரன்கள் பின்னடைவு..!

Siva

ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (07:11 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் மட்டுமே எடுத்து 134 ரன்கள் பின்னடைவில் உள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் அபாரமாக சதம் அடித்ததை அடுத்து அந்த அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்தது

ஜடேஜா அபாரமாக பார்த்து வீசி 4 கட்டுகளையும் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் 73 ரன்கள் அடித்த நிலையில் அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி நேற்று ஆட்ட நேரம் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

துருவ் ஜுரல் 30 ரன்கள் , குல்தீப் யாதவ் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் உள்ளனர். . இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கும் நிலையில் இந்திய அணியின் ஸ்கோர் உயருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்