6ஜி ஆராய்ச்சியில் NOKIA நிறுவனம்!

Sinoj

சனி, 24 பிப்ரவரி 2024 (19:31 IST)
நோக்கியா நிறுவனம் 6ஜி ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது.

இன்றைய உலகில் எல்லோருடமும் கைபேசியை  பயன்படுத்தி வருகின்றனர். அன்றாட வாழ்வில் அத்தியாவசியமாகவே செல்போன் மாறிவிட்டது.
 
செல்போனில் இருந்து ஸ்மார்ட் போன்களில் இன்றைய உலகம் சமூக வலைதளங்கள், போட்டோ, கேமரா, வீடியோ ஆபிஸ் ஒர்க் என பலவற்றையும் ஸ்மார்ட் போனில் இருந்தே செய்ய முடியும் என்ற நிலையில், அதி நவீன ஸ்மார்ட் போன்கள் இதன் அடுத்த அப்கிரேட் ஆக வரவுள்ளன.
 
தற்போது 5ஜி நெட்வொர்க் பிரபலமாக இருக்கும் நிலையில், நோக்கியா நிறுவனம் 6ஜி ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது.
 
அதன்படி, இந்தியாவில் 6ஜி சேவையை அறிமுகம் செய்து தொடர்பாக இந்திய அறிவியல் கழகத்துடன் ( IISC) இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகிறது.
பெங்களூரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள 6ஜி ஆராய்ச்சிக் கூடத்தில் ஆய்வு நடைபெற்று வருவதாகவும், பாரத் 6ஜி என்ற பெயரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டம் வரும் 2030 ஆம் ஆண்டு  அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்