கவுண்டி அணியுடனான பயிற்சி ஆட்டம் டிரா!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (18:01 IST)
இந்திய அணிக்கும் கவுண்ட்டி அணிக்கும் இடையே நடந்த 3 நாள் பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட்4 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்காக இந்திய அணி கவுண்ட்டி அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடியது. இந்த போட்டி டிராவில் முடிந்துள்ளது. முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 311, கவுண்டி அணி 220 ரன்கள் எடுத்தது. கடைசி நாளான நேற்று இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் பேட் செய்த கவுண்ட்டி அணி 31 ரன்கள் சேர்த்த போது போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்