இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பெர்த் நகரில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகின்றது. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் குறைவான ரன்களை எடுத்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் சூடு பிடித்துள்ளது.
இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 534 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் எடுத்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. நாதன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகியுள்ளார். கேப்டன் பேட் கம்மின்ஸ் இரண்டு ரன்களிலும், லாபு சாஞ்சே மூன்று ரன்களில் அவுட் ஆகியுள்ளனர். உஸ்மான் காவாஜா மூன்று ரன்களுடனும் களத்தில் அவுட்டாகாமல் உள்ளார்.
12 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலியா அணி இன்னும் 522 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமையில் உள்ளது. இதனால், இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகும் என கூறப்படுகிறது.