5 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.. நங்கூரமாக நிற்கும் டிராவிஸ் ஹெட்..!

Mahendran
சனி, 7 டிசம்பர் 2024 (12:37 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்தாலும் டிராவிஸ் ஹெட் 63 ரன்கள் எடுத்து நங்கூரம் போல் தனது அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் என்ற நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்தது.

இந்த நிலையில் இன்று ஆட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 214 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா 3 விக்கெட்டுக்களையும்  நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

ஐந்து விக்கெட்டுகளை இழந்தாலும் டிராவிஸ் ஹெட் பொறுமையாக விளையாடி வருகிறார் என்பதும் அவர் 63 ரன்களுடன் தற்போது விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்திரலிய அணி, தற்போது இந்திய அணியை விட 34 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்