இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இன்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில், இந்திய பந்து வீச்சாளர் பும்ரா பதிலடி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆனால், முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்தடுத்து ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டுகள் மளமள என விழுந்தது. அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 42 ரன்களும், அவரை அடுத்து சுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர். ஸ்டார்க் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில், இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய இருக்கிறது. பும்ரா தனது அதிரடி பந்துவீச்சு மூலம் ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை மளமள என வீழ்த்துவாரா? இந்தியாவை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.