இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேலும், இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரில் ஆஸ்திரேலியா இரண்டு போட்டிகளிலும், இந்தியா ஒரு போட்டியில் வென்றுள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது.
இந்த நிலையில், இன்று சிட்னியில் தொடங்கி இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் 10 ரன்களிலும், கே.ஆர். ராகுல் 4 ரன்களில் அவுட் ஆனார்கள். கே.எல்.ராகுல் 20 ரன்களில் அவுட் ஆனார். இதுவரை 25 ஓவர்களில் இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்து, 57 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது விராட் கோலி மற்றும் ரிஷப் பேண்ட் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதால், இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், இன்றைய போட்டியில் பும்ரா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரோஹித் சர்மா மோசமான பார்ம் காரணமாக இன்றைய போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.