நடையைக் கட்டிய ரோஹித்… மயங்க் அரைசதம் – இந்தியா 105 /1

வியாழன், 10 அக்டோபர் 2019 (13:06 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டு ஹனுமா விஹாரி நீக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் ஷர்மாவும் மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் இரண்டு சதம் அடித்த ரோஹித் ஷர்மா 14 ரன்களில் ரபரா பந்தில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த புஜாராவோடு மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி வருகின்றனர்.  37 ஓவர்களில் இந்திய அணி 105 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

மயங்க் அகர்வால் அரைசதம் அடித்து 52 ரன்களோடும் சித்தேஸ்வர் புஜாரா 30 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்