ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (18:59 IST)
ஒருபக்கம் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி மேல் வெற்றியை குவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்திய ஹாக்கி அணியும் அவ்வப்போது வெற்றி பெற்று நாட்டின் பெருமையை உணர்த்தி வருகிறது.



 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஆசியகோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிப்போட்டி இன்று வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.
 
இந்த இறுதிப்போட்டியில் மலேசிய அணியுடன் மோதிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
 
ஏற்கனவே கடந்த 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி தற்போது 3வது முறையாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்