சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் மற்றும் தைவானின் சான் யுங்-ஜான் ஜோடிக்கும், செக் குடியரசின் லூசி ரடேக்கா மற்றும் கட்ரினா சினியகோவா ஜோடிக்கும் நேற்று நடந்த விறுவிறுப்பான மகளிர் இரட்டையர் இறுதி போட்டியில் 6 - 3, 6 - 2 என்ற நேர் செட்டில் மார்டினா ஹிங்கிஸ் மற்றும் தைவானின் சான் யுங்-ஜான் ஜோடி வெற்றி பெற்றது.
அதேபோல் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயின் நாட்டு வீரரான நடால் தனது சக நாட்டு வீரரான ஆண்டர்சனை 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சாம்பியன் பட்டம் வென்றார்.