ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதம் அடிக்கத் தவறினால், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தான் நிர்வாணமாக வலம் வருவேன் என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் சவால் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஒரு பாட்காஸ்டில் பேசிய மேத்யூ ஹைடன், “வரவிருக்கும் ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் கண்டிப்பாக சதம் அடிப்பார். அவர் சதம் அடிக்கத் தவறினால், நான் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன்” என்று கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.