நள்ளிரவில் நடுக்கம்.. பயங்கர கனவுகள்.. விமான விபத்தில் பிழைத்த ஒரே நபருக்கு ஏற்பட்ட பிரச்சனை..!

Siva

ஞாயிறு, 13 ஜூலை 2025 (16:19 IST)
கடந்த மாதம் 12 ஆம் தேதி, லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். 
 
இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ், விபத்து நடந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்றும், பயங்கரமான கனவுகளால் அவர் தொடர்ந்து அச்சத்தில் இருப்பதாகவும் அவரது சகோதரர் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விஸ்வாஸ் உடன் விமானத்தில் பயணம் செய்த அவரது மற்றொரு சகோதரரின் உயிரிழப்பு மற்றும் விமான விபத்திலிருந்து தப்பித்த அதிர்ச்சி இன்னும் அவரை மீள விடவில்லை என்று அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். 
 
வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் அவரது நலன் குறித்து விசாரித்தாலும், விஸ்வாஸ் யாரிடமும் பேசுவதில்லை என்றும், மன அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 
திடீரென நள்ளிரவில் எழுந்து நடுங்கி கொண்டிருப்பதாகவும், அவரால் தூங்க முடியவில்லை என்றும், பயங்கர கனவுகளால் அவர் தொடர்ச்சியாக அதிர்ச்சியுடனும் பயத்துடனும் உள்ளார் என்றும் அவரது சகோதரர் பேட்டி அளித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்